மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் : திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை:

சென்னையில் கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் 5 ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலானது மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.

இதன் அடிப்படையில், 2018 ம் ஆண்டு மே 7 ம் தேதி அடிக்கல் நாட்டி சுமார் 3 ஆண்டுகள் நடந்து வந்த பணிகள் முடிந்த நிலையில் இந்த நினைவிடம் இன்று திறக்கப்பட்டது. 80 கோடி ரூபாய் செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்டிருக்கும் இந்த நினைவிடத்தை காலை 11 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

Read more – சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை நிறைவு : விடுதலையானார் சசிகலா

மேலும், ஜெயலலிதா நினைவிடம் தொடர்பான கல்வெட்டையும் திறந்து வைத்தார். அவரை தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டதை தொடர்ந்து மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

Exit mobile version