கொட்டும் மழையில் குடைபிடித்தபடி முதலமைச்சர் ஆய்வு செய்தார்… ஆய்விற்கு பின் வெளியான முக்கிய அறிவிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் பழனிசாமி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.
CM Edapadi Palanisamy

நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக மாறி, இன்று இரவு கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், இன்று மதியம் 12 மணியளவில் முதல்கட்டமாக 1000 கன அடி நீரை வெளியேற்ற அரசு உத்தரவிட்டது.

அதன்பட், தற்போது செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியில் உள்ள 7 மதகுகளில், முதற்கட்டமாக வினாடிக்கு 1000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், சென்னை உள்ளிட்ட புயல் மழையால் பாதிக்கப்படும் 13 மாவட்டங்களுக்கும், நாளையும் பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி சென்னை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version