உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண் மனிஷாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண் உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண் மனிஷாவின் படுகொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் இன்று மாலை வட சென்னை டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரி எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
படுகொலைக்கு உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் விரைவு நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றம் அமைத்து உடனடியாக வழக்கை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் கும்பல் படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் தோழர்.கி.சு.குமார் தலைமை வகித்தார். தோழர் வீரபாண்டியன் கண்டன உரையாற்றினார் பெரம்பூர் பகுதி செயலாளர் தோழர் சுப்பிரமணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
தோழர் செண்பகம் தோழர்.எஸ்.கே.சிவா இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்