தொடர்ந்து 3-வது முறையாக தமிழகம் முதலிடம்… முதலமைச்சர் வெளியிட்டுள்ள டுவீட்!!!

சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இவ்விருதினை அனைவருக்கும் அன்புடன் சமர்ப்பிக்கிறேன் என்று முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா டுடே, அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் சிறந்த மாநிலங்களின் பட்டியலை, ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு, விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி இந்த வருடம் வெளியிட்ட பட்டியலில், தொடர்ந்து 3-வது முறையாக (2018, 2019, 2020) இந்த வருடமும் தமிழகம் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

20 மாநிலங்கள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில், தமிழகத்தைத் தொடர்ந்து இமாச்சல பிரதேசம் 2-வது இடத்திலும், குஜராத் 3-வது இடத்திலும், பஞ்சாப் 4-வது இடத்திலும், கேரளா 5-வது இடத்திலும் உள்ளது. 

மேலும் இந்தியா டுடே சார்பில், டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்படவுள்ளது. இதுக்குறித்து இந்தியா டுடே கூறும்போது, இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாக கூறியுள்ளது.

இதுக்குறித்து முதலமைச்சர் பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசு அதிகாரிகள், பணியாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பாலும், தமிழக மக்களின் ஒத்துழைப்பாலுமே “தொடர்ந்து 3-வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு” தேர்வாகி சாதனை புரிந்துள்ளது. இவ்விருதினை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்கு ஒற்றுமையாக உழைப்போம்! என்று பதிவிட்டுள்ளார்.

Exit mobile version