தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதல்வர் ஸ்டாலின்……

தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதல்வர் தலைவர் மு. க. ஸ்டாலின் சொல்கிறார் அதனை தமிழக முதல்வர் செய்கிறார் என தி மு க இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுட்டுள்ளார்.

கொரோனா பரவல், தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு, தளர்வுகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் உடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

அதைதொடர்ந்து தற்போது ஊரடங்கு விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகள் அடங்கிய புதிய அறிவிப்பு வெளிப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் தளர்வுகளின் விவரங்கள் பின்வருமாறு:

இது போன்ற தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தி மு க இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்து ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பது, ‘தமிழகத்தில் இ-பாஸ் ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதனை அச்சுப்பிசகாமல் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து உட்பட அனைத்திலும் தமிழகத்தில் அறிவிக்கப்படாத முதல்வராக தலைவர் ( மு.க.ஸ்டாலின்) சொல்கிறார் அதனை ஈபிஎஸ் செய்கிறார்.”

Exit mobile version