நீட் எனும் பயங்கரம்: தமிழகத்தில் ஒரே நாளில் இரண்டாவது நபர் தற்கொலை

நீட் தேர்வு அச்சத்தால் தருமபுரி பகுதியைச் சேர்ந்த, ஆதித்யா எனும் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மதுரையை சேர்ந்த, காவல் துணை ஆய்வாளரின் மகள் ஜோதிஸ்ரீ துர்கா எனும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்னதாகவே, நீட் தேர்வு அச்சத்தால் தருமபுரி பகுதியைச் சேர்ந்த ஆதித்யா எனும் மாணவனும் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு அச்சம் காரணமாக, தமிழகத்தில் ஒரே வாரத்தில் நடந்துள்ள மூன்றாவது தற்கொலை இதுவாகும்

Exit mobile version