அக்டோபர் 31-ஆம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா பரவலின் வேகம் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், மருத்துவ குழுவுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதைதொடர்ந்து வெளியான அறிவிப்பில், அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்ப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில்,
புதிய தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- அக்டோபர் 31 ஆம் நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
- அக்டோபர் 1ம் தேதி முதல் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்வது குறித்த அரசாணை நிறுத்தி வைப்பு
- திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், கடற்கரைகளுக்கான தடை நீட்டிப்பு
- டீக்கடை, உணவகங்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரை செயல்பட அனுமதி
- உணவகங்கள் , டீக்கடைகளில் பார்சல் சேவை இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி
- வெளிநாட்டு விமான சேவைக்கான தடை தொடரும்
- சினிமா படப்பிடிப்புகளில் 100 பேருக்கு மிகாமல் பணியாற்ற அனுமதி
- சென்னை விமான நிலையத்திற்கு இனி தினமும் 100 உள்நாட்டு விமானங்கள் வந்து செல்ல அனுமதி
- புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திற்கான தடை நீடிக்கும் போன்ற கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் அரசு அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.