கொரோனா பரிசோதனை..2000 கிளீனிக்குகள்..முதலமைச்சர் அறிவிப்பு

கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளீனிக்குகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச்செயலகத்தில், முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஆலோசனை முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது:
கொரோனா படிப்படியாக குறைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும்,
பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதாகவும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளீனிக் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத பகுதிகளில் அமைக்கப்படும் மினி கிளீனிக்கில் மருத்துவர்கள், செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகியோர் இடம் பெறுவர் என்றார்.

40 சதவீத மக்கள் முக கவசம் அணிவது  இல்லை எனவும், முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார். காசிமேடு துறைமுகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கக்கள் பின்பற்றப்படவில்லை என்ற முதலமைச்சர், ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி வாங்க கூட்டமாக குவியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் குவிவதை காவல் துறையினர் தடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

டெங்கு கொசுவை தடுக்க தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

Exit mobile version