எஸ்.வி.சேகருக்கு மானம், ரோஷம் இருக்கா? – அமைச்சர் ஜெயக்குமார் சுளீர்

எஸ்.வி. சேகர் மான, ரோஷம் உள்ளவராக இருந்தால் அதிமுக சட்டசபை உறுப்பினராக இருந்து 5 ஆண்டுகள் பெற்ற சம்பளத்தை, திருப்பித்தர வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் எஸ்.வி. சேகர் வெளியிட்டு இருந்த வீடியோவில், அதிமுக தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் கொடியிலும், கடசியிலும் இருக்கிற அண்ணாவையும், மேடையில் வைக்கும் பெரியார் புகைப்படத்தையும் தவிர்க்க வேண்டும். தேர்தலை முன்வைத்து மும்மொழிக் கொள்கையை எதிர்க்க வேண்டாம் என மிரட்டல் பணியில் பேசியிருந்தார்

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், மான, ரோஷம் உள்ளவராக இருந்தால் அதிமுக எம்.எல்.ஏ.வாக 5 ஆண்டுகள் பெற்ற சம்பளம் மற்றும் பென்சனை எஸ்.வி.சேகர் திருப்பித்தருவாரா? என கேள்வி எழுப்பினார். மேலும், விளம்பரத்திற்காக பேசும் பேச்சு மக்கள் மத்தியில் எடுபடாது” எனகுறிப்பிட்டார்.

Exit mobile version