மக்கள் தங்கள் குறைகளை வீடியோகால் மூலம் தெரிவிக்கலாம்….

சென்னை போலீஸ் கமிஷனராக மகேஷ் குமார் அகர்வால் கடந்த 2 ஆம் தேதி பதவி ஏற்றதிலிருந்து பலவகை மாற்றங்களை செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களிலும் பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 63691-00100 என்ற செல்போன் எண்ணில் ‘வாட்ஸ்-ஆப்’ வீடியோ காலில் பேசி பொதுமக்களிடம் அவர்களது குறைகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்தநிலையில் பொதுமக்கள் ‘வாட்ஸ்-ஆப்’ கால் மூலம் பேசி அந்தந்த பகுதி துணை கமிஷனர்களிடமும் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுமக்கள் துணை கமிஷனர்களை தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version