தஞ்சை எம்.எல்.ஏ. வுக்கு கொரோனா!!

தஞ்சை மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. நீலமேகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமாகவே உள்ளது.

இந்நிலையில், தஞ்சை மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. நீலமேகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் அநேகர், நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதில் சுகாதார மற்றும் தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்டோரும் அடங்குவர்.இந்த தொற்றுக்கு பல அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஏற்கனவே, தஞ்சை மாவட்டத்தில் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில்,மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  

Exit mobile version