இன்று முதல் டோக்கன் முறையில் மதுவிற்பனை… மூடப்பட்ட பார்கள்..

தமிழகத்தில் இன்று முதல் மதுக்கடைகளில் டோக்கன் முறையில் மது விற்பனை செய்யப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. மேலும், 12 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு ஒத்திவைப்பு, இரவு நேர பயணத்திற்கு தடை, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

ஆனால், அரசு மதுபான கடைகளுக்கு எந்தவொரு கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என்று எழுந்த நிலையில், மதுக்கடைகள் இரவு 9 மணிக்கு மேல் செயல்பட அனுமதி இல்லை, கடைப் பணியாளர்கள் மூன்றடுக்கு முகக்கவசம், கையுறைகள் பயன்படுத்த வேண்டும் போன்ற விதிமுறைகள் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டது.

Read more – இன்றைய ராசிபலன் 20.04.2021!!!

இந்தநிலையில், தமிழக அரசை தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகமும் 14 விதிமுறைகளை கொண்ட கட்டுப்பாட்டு விதிமுறைகளை வெளியிட்டது. அதில்,

*இன்று முதல் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 5 மணி வரை மட்டுமே இயங்கும்

*சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல்

*கூட்டம் கூடுவதை தவிர்க்க மீண்டும் டோக்கன் முறை

*பார்களை மூடவும், 5 நபர்களுக்கு மேல் கூட்டம் கூட அனுமதில்லை என்ற கட்டுப்பாட்டு விதிகளை வெளியிட்டுள்ளது.

Exit mobile version