சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டண வசூல் காலவரையின்றி ஒத்திவைப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு ஒப்புதல் அளித்த நிலையில், சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ம் தேதி முதல் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்தது.
இதன்படி, வீடுகளில் இருந்து குப்பை கொட்டுவதற்கு 10 ரூபாய் முதல் 100 வரையிலும்,வணிக நிறுவனங்களுக்கு 1000 ரூபாய் முதல் 7500 ரூபாய் வரை வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஹோட்டல், திரையரங்குகள், மருத்துவமனைகளிலும் கூட கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்தது.இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் பல்வேறு எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
Read more – விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை
இந்தநிலையில் சென்னையில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது : திட்டக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் முதல்வர் அறிவுறுத்தலின்படி, காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.