ஆண், பெண் காவலர்கள் ஒரே வீட்டில் இருந்ததற்கு நடவடிக்கை எடுப்பது சரியல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை :
கடந்த 1997 ம் ஆண்டு தமிழக காவல்துறையின் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணி அமர்ந்த சரவணபாபு. காவல்துறை குடியிருப்பில் பணி வரைமுறைகளை மீறி சக பெண் காவலருடன் தவறான முறையில் இருந்ததாக ஆயுதப்பிரிவு ஐ.ஜி அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சரவணபாபு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வழக்கு தொடர உத்தரவிட்டார்.அப்பொழுது சரவணபாபு சார்பில், தோழியை பார்க்க வந்த பெண் காவலர், அந்த பெண் வீட்டில் இல்லாததால், பக்கத்து வீட்டில் சாவியைக் கொடுத்துவிட்டு சென்றாரா என்று கேட்கவே சரவணபாபு வீட்டிற்குள் வந்துள்ளார். அந்த நேரத்தில், யாரோ வெளியில் கதவை சாத்திவிட்டனர். தவறுதலாக அதிகாரிகள் வந்தபோது இந்த தவறான புரிதலால் சரவணபாபு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டது.
Read more – தண்டவாளத்தில் தலைவைத்து போட்டோவிற்கு போஸ் கொடுத்த பெண் : அதிர்ந்த இங்கிலாந்து ரயில்வே
மனுதாரர் சமர்ப்பிக்கும் கருத்தையே காவல்துறையின் சாட்சிகளும் நீதிபதிகளிடமும் சமர்பிக்கப்பட்டதால், சம்பந்தப்பட்ட பெண் காவலரும், காவலர் சரவணபாபுவும் தவறான நோக்கோடுதான் வீட்டிற்குள் இருந்தார்கள் என்பதற்கு எந்த சாட்சியங்களும் ஆதாரங்களும் இல்லை. ஆண் காவலரும், பெண் காவலரும் குறிப்பிட்ட நேரத்தில் ஒரே வீட்டில் இருந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் மீது தவறான நோக்கம் கொண்டிருந்தார்கள் என்று குற்றம் சாட்டி பணி நீக்கம் செய்தது நியாயமற்றது என்று நீதிபதி தெரிவித்தார். மேலும், சரவணபாபுவை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்வதோடு, பணிபலன்கள் பெற அவர் தகுதியானவர் எனவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.