விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி என முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
விவசாயிகள் கடன் தள்ளுபடியால் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். இதுகுறித்த அரசாணை விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவிப்புக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மேசையை தட்டி வரவேற்பு அளித்தனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் 2016ஆம் ஆண்டில் தமிழக அரசு பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.