“எய்ட்ஸ் நோயாளி” என்று தெரிந்தே தான் காதலித்தேன் : காவல் துறையினரை அதிரவைத்த 17 வயது சிறுமியின் வாக்குமூலம்

“எய்ட்ஸ் நோயாளி” என்று தெரிந்தே தான் பரிதாப்பட்டு காதலித்தேன் என்று 17 வயது சிறுமி அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன் கோணம் பகுதியை சேர்ந்தவர் ரதீஷ் (22). ஆட்டோ டிரைவராக இருந்து வரும் இவர் 11 ம் வகுப்பு மாணவியை கடந்த சில மாதங்களாக காதலிப்பது போல் நடித்து ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்றுள்ளார். மேலும், அந்த பெண்ணிற்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு அந்த ஆட்டோ டிரைவரையும் மாணவியையும் நாகர்கோவிலில் கண்டுபிடித்து அழைத்து வந்துள்ளனர். பெற்றோரிடம் அந்த மாணவியை ஒப்படைத்து விட்டு, ஆட்டோ டிரைவர் ரதீஸை பிடித்து விசாரணை செய்ததில் அவருக்கு எய்ட்ஸ் இருப்பது தெரியவந்துள்ளது. இதைக்கேட்டு காவல்துறையினர் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியடைந்தனர்.

Read more – அமெரிக்காவில் அரங்கேறிய கொடூர சம்பவம் : கர்ப்பிணி உள்பட 5 பேர் சுட்டுக்கொலை

இந்த நிலையில், சிறுமியிடத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, ரதீஷ்க்கு எய்ட்ஸ் நோய் இருப்பது எனக்கு தெரிந்து தான் பரிதாபபட்டு காதலித்ததாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனை மற்றும் எய்ட்ஸ் பரிசோதனைக்கும் உட்படுத்தி வருகின்றனர்.

Exit mobile version