நாய்க்கு சமாதி கட்டிய பாசக்கார தம்பதி

பொதுவாக செல்லப்பிராணிகளை பிள்ளைகள் போல வளர்ப்பது வழக்கம். மதுரையில் ஒரு தம்பதி தாங்கள் வளர்த்த நாய்க்கு சமாதி கட்டி வழிபட்டு வருகின்றனர்.

மதுரை பெத்தானியாபுரம் அகஸ்தியர் தெருவில் வசித்து வருகிறவர்கள் ராஜா – விஜயா தம்பதி. மாநகராட்சியில் மதுரை வேலை பார்த்து வரும் ராஜா . தன் நண்பரின் வீட்டில் இருந்து ஒரு அழகான ஆண் நாய்க்குட்டியை வீட்டுக்கு எடுத்து வந்து அதற்கு மணி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். கடந்த 5 வருடங்களாக வீட்டில் ஒரு குழந்தை போல் மணி வளர்ந்து வந்தது. ஒரு கட்டத்தில் சுட்டித்தனமும் புத்திசாலித்தனமும் நிறைந்த மணிதான் இந்த தம்பதிக்கு எல்லாமுமாக மாறிப் போனது.

தங்கக் செயின் போட்டு வைக்கும் அளவுக்கு நாய் அவர்களது குழந்தை போலவே இருந்தது. இந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு மணி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டது. கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சையளித்தும் பலன் தரவில்லை. தாய் போல வளர்த்த விஜயாவின் மடியிலேயே மணி உயிரை விட்டுவிட்டது. இதனால், மிகுந்த மன வருத்தமடைந்த அந்த தம்பதி, அதன் சடலத்தை மணி உறங்கும் இடத்திலேயே புதைத்தனர். பின்னர், அதன் நினைவாக தங்கள் வீட்டுக்குள்ளே சமாதி எழுப்பி  அது பயன்படுத்திய பெல்ட், தங்கச் செயினை வைத்து தினமும் வழிபட்டு வருகின்றனர். மணியின் சமாதியின் மீது, அதன் உருவ படமும் பொறிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version