10 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் வேண்டுமென்ற மாணவர்களுக்கு தனி தேர்வு நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பயிலும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி அளிக்கப்பட்டது. இந்தநிலையில், தற்போது மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் மதிப்பெண் வழங்க மாநிலம் முழுவதும் தேர்வு ஒன்றை நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்வு மதிப்பெண் 35 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
Read more –கொரோனாவிற்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே : பிரதமர் மோடி
இந்தநிலையில்,10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற விரும்பும் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதலாம் என்றும், இந்தத் தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், இதற்கான தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.