வருகிற ஜனவரி 9 ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடும் : முதல்வர் துணைமுதல்வர் அறிவிப்பு

ஜனவரி 9ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடும் என முதல்வர் துணை முதல்வர் அறிவித்துள்ளனர்.

சென்னை,

வரும் ஜனவரி 9-ம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் நடைபெறும் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், 

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடட்ம் வரும் ஜனவரி 9-ம் தேதி சனிக்கிழமை காலை 8.50 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அதிமுக அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.

Read more – மின்வாரிய ஊழியர்கள் தேர்வு தொடர்பான அரசாணை திரும்பப் பெறப்படுகிறது – அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழோடும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும், தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version