இடி தாக்கி வேதபுரீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் சேதம்…

செய்யாறில் பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் இடி தாக்கியதால் சேதமானது. பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

செய்யாறில் பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் இடி தாக்கியதால் சேதமானது. பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பரிகாரங்கள் செய்யப்டுக்கு வருகின்றது. இக்கோயில் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றது. இங்குள்ள ஆண் பனை, பெண் பனையாக மாறி, குலை ஈன்ற வரலாற்று சிறப்பு மிக்கது இக்கோயில். தற்போது இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாக்கள் வேலைகள் நடந்து வருகின்றது. அதனால் கோவில் கட்டுமான பணிகளும் நடைபெறுகின்றது.

இந்நிலையில் செய்யாறு உட்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. செய்யாறில் நேற்றிரவு 11 மணியளவில் பலத்த இடியுடன் மழை பெய்தது. அப்போது திடீரென இடி தாக்கியதில் ராஜகோபுரத்தின் வடமேற்கு பகுதி மேற்புறம் ஒரு பகுதி இடிந்தது. இதனை தொடர்ந்து காலையில் கோவிலுக்கு வந்தார்கள் அதனை கண்டறிந்தார்கள். மேலும் காலை கோயிலுக்கு வந்த சிவாச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் கீழே கிடந்த யாழி சிற்பத்தின் மண் துகள்களை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதைப்பற்றி கேள்விப்பட்ட கோவில் நிர்வாகிகள் இடிந்து பூனா கோபுரத்தை சீரமைக்கும் பணியை ஆயத்த படுத்தியுள்ளனர். மேலும் இடிந்து போன யாழி சேலையையும் உடனே சீரமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.

Exit mobile version