‘ரெம்டெசிவிர்’ உயிர்காக்கும் மருந்து இல்லை, அதை தேடி அலைய வேண்டாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 16,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு 98 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்தநிலையில் கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள ரெம்டெசிவிர் மருந்து வாங்க படையெடுத்து வருகின்றனர்.
மேலும், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு ரெம்டெசிவிர் மருந்து டாக்டர்களால் அதிகளவில் பரிந்துரைக்கப்படுவதால் தமிழகம் முழுவதும் இந்த மருந்துக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மட்டும் சிறப்பு கவுண்ட்டர் அமைக்கப்பட்டு வினியோகம் செய்து வருவதால் மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.
Read more – வெண்டிலேட்டர் கிடைக்காமல் தவித்து வரும் பெண் நீதிபதி… டெல்லியில் நாளுக்குநாள் மோசமாகி கொண்டிருக்கும் நிலை..
இதுகுறித்து பொதுசுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் வெளியிட்ட பதிவு ஒன்றில், ரெம்டெசிவிர் உயிர்காக்கும் மருந்து இல்லை. இந்த மருந்தை போட்டுக்கொண்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை குறைத்து கொள்ளலாமே தவிர, இந்த மருந்தை போட்டால்தான் கொரோனாவில் இருந்து குணமடைவோம் என்று யாரும் உறுதி அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.