பிளஸ் 2 முதலாவது மொழித்தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு வரும் மே 3 ம் தேதி நடைபெறும் என்றும் அதற்கு முன்னதாக ஏப்ரல் 16 ம் தேதி செய்முறை தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தேர்தலுக்கு முன்னதாக அறிவித்திருந்தது. கடந்த ஏப்ரல் 6 ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் அதற்கான தேர்தல் முடிவுகள் மே 2 ம் தேதி வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், மே 2 ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், மே 3 ஆம் தேதி நடக்க இருந்த ப்ளஸ் 2 மொழிபாடத்தேர்வு 31 ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிற தேர்வுகள் அனைத்தும் திட்டமிடப்பட்ட தேதிகளில் நடைபெறும் என தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
Read more – சென்னை மெட்ரோவில் 50 % தள்ளுபடி .. புத்தாண்டிருக்கு புதிய சலுகையளித்த மெட்ரோ நிர்வாகம்..
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்வுகள் இயக்ககம் தேர்வு தேதியை உறுதியாக வெளியிட்ட நிலையில் பிளஸ் 2 தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என்று உறுதியாகியுள்ளது.