கொரோனா காலத்தில் 15 வகையான பாரம்பரியமான நெல்லை சாகுபடி செய்த பொறியாளர்..

கொரோனா காலத்தில் 15 வகையான பாரம்பரியமான நெல்லை சாகுபடி செய்து பொறியாளர் அசத்தியுள்ளார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் என்ஜினீயர் செந்தில் குமார். இவர் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார், வார வேலை நாட்கள் தவிர விடுமுறை நாட்களில் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்துள்ளார்.

இதே போல் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தே படியே பணியையும் பார்த்துக்கொண்டே எஞ்சிய நேரத்தில் தனக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலத்தில் இயற்கை நெல் சாகுபடியில் இறங்கியுள்ளார். வழக்கத்தில் இருந்து காணாமல் போன பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை கண்டறிந்துள்ளார். அதிலும் குறிப்பாக, கருப்பு கவுனி, வாசனை சீரக சம்பா, கல்லுரண்டை, புத்தர் சாப்பிட்டதாக கருதப்படும் காளான் நமக், கருடன் சம்பா, தங்க சம்பா, பூங்கார், கருங்குருவை, இலுப்பை பூ சம்பா மற்றும் ஆள் உயரத்திற்கு வளரும் மாப்பிள்ளை சம்பா என 15 வகையான ரகங்களை பயிரிட்டுள்ளார்.

Read more – ஜியோமி உள்ளிட்ட 9 சீன நிறுவனங்கள் முதலீடு செய்ய அமெரிக்காவில் தடை

இதுகுறித்து செந்தில் குமார் கூறியதாவது, சிறு வயதில் இருந்தே எனக்கு விவசாயத்தில் ஈடுபாடு இருந்ததால் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட ஆர்வம் காட்டி வருகிறேன். என்னை பார்த்து நண்பர்களும், கிராமத்தினரும் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். விளைவித்த நெல்லை தனது தேவைக்கு போக மற்றவர்களுக்கு விதை நெல்லாக கொடுத்து மீண்டும் பாரம்பரிய பயிர் ரகங்களை மீட்டெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version