தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் தொடக்கம்

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது.

2021-ம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று நடக்கிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கும். அவர் ஆங்கிலத்தில் நிகழ்த்தும் உரையை சபாநாயகர் ப.தனபால் தமிழில் மொழிபெயர்த்து கூறுவார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கடந்த கூட்டம் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்தமுறையும் அங்கேயே கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழக ஆளுனர் உரையில் கவர்ச்சிகரமான புதிய அறிவிப்புகளும், திட்டங்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்த முக்கிய அறிவிப்பு இடம் பெறலாம் என்று கருதப்படுகிறது. அதே நேரத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. கேள்வி எழுப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version