10 மற்றும் 12 ம் வகுப்புக்கான தேர்வுகளை தொடங்க தேர்வுத்துறைக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
சென்னை:
10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கவும், தேர்வு பணிகளை தொடங்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக மாணவர்களை பள்ளிக்கு நேரில் அழைத்து விவரங்களைப் பெறலாம் என்றும், பொதுத்தேர்வுக்கான கட்டணத்தையும் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. மேலும், ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்களை மட்டுமே அழைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
Read more – தாயகம் திரும்புகிறது தமிழக மீனவர்களின் உடல் : இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்க இலங்கை அரசு முடிவு
கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக கட்டுப்பாட்டுப் பகுதி மற்றும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு வேறு ஒரு நாளில் அவகாசம் வழங்கவும் தமிழக அரசு சார்பில் வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.