ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அரசாணையை வெளியிட்டது : தமிழக அரசு

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை :

தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி பாரம்பரிய கலாசார திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வரும் 2021 பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தப் போட்டிகளை நடத்துவதற்கும், பங்கேற்பதற்கும் சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்திருக்கிறது.

Read more – பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு தினமும் ரூ.100 ஊக்கத்தொகை : அசாம் மாநிலஅரசு முடிவு

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 14 ஆம் தேதி அவனியாபுரம், 15 ஆம் தேதி அலங்காநல்லூர் மற்றும் 16 ஆம் தேதி பாலமேடு ஆகிய மூன்று இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

Exit mobile version