உயர்கல்வி நிறுவனங்களில் வன்னியர்களின் இடஒதுக்கீட்டை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு..

அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் வன்னியர்களுக்கு 10.5 % இடஒதுக்கீட்டை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் கடந்த 15 வது சட்டப்பேரவை கடைசி கூட்டத்தொடரில் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 % இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 % இடஒதுக்கீட்டை வழங்கி நிறைவேற்றியது. இந்த அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு பிரத்யேகமாக இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

Read more – கேரளாவில் 3 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தல் : தேதியை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம்

இந்த நிலையில், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் வன்னியர்களுக்கு 10.5 % இடஒதுக்கீட்டை செயல்படுத்த உயர்கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவர் சேர்க்கை, புதிய பணியாளர் மற்றும் பேராசிரியர் நியமனத்தில் இந்த உள் ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் எனவும், சீர்மரபினருக்கான ஒதுக்கீட்டில் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் வன்னியர்களுக்கான 10.5 % உடனடியாக அமலுக்கு வருகிறது.

Exit mobile version