ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான நியமனம் குறித்து பள்ளிக்கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான நியமனம் குறித்து பள்ளிக்கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுத்தியுள்ளது.

சென்னை:

திருவாரூர் மாவட்டம், கோனேரிராஜபுரத்திலுள்ள அரசு உதவி்பெறும் வட மட்ட மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு முருகன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அனுமதிக்கப்பட்ட இந்த பணியிடத்துக்கான நியமனத்திற்கு அனுமதிக் கோரி மாவட்ட கல்வி அதிகாரியிடம் பள்ளி நிர்வாகம் விண்ணப்பித்தது.

பள்ளியின் இந்த கோரிக்கையை மாவட்ட கல்வி அதிகாரி நிராகரித்தார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த உத்தரவில், அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ள அனுமதி பெற அவசியமில்லை என்று தீர்ப்பளித்தார்.

Read more – மனைவியின் துயரை போக்க 15 நாளில் கிணறு தோண்டிய கணவர்…

இதை எதிர்த்து பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் மேல் முறையீடு செய்தனர்.இந்த வழக்கானது தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையில் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் காலியாக இருந்த பணியிடத்துக்கு, 4 ஆண்டுகள் தாமதமாக 2018 ம் ஆண்டு தான் நியமன நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாக, பள்ளிக்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு நியமனம் மேற்கொள்ள மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் என எந்த விதி முறைகளும் இல்லை எனவும், அனுமதிக்கப்பட்ட பணியிடத்துக்கு நியமனம் செய்ய பள்ளி நிர்வாகம் எடுத்த நடைமுறைகள் தவறில்லை என்று தெரிவித்து உத்தரவிட்டனர்.

Exit mobile version