தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது சரக்கு வாகனத்தை ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏரல் :
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு கொற்கையில் ரோந்து பணியில் இருந்தபோது, போதையில் சுற்றிய முருகவேல் என்பவரை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முருகவேல் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்து உதவி ஆய்வாளர் பாலுவை ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையின் உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் கொலை செய்த முருகவேலை கைது செய்த 10 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
Read more – சையது முஷ்தாக் அலி டிராபி : சித்தார்த் சுழலில் சிக்கி சிதறிய பரோடா அணி… தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம்
இதேபோல், கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் ரவுடியை பிடிக்க சென்ற ஒரு காவலரை நாட்டு வெடிகுண்டை வீசி கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.