தமிழகத்தில் மலை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே மலை மாவட்டமான நீலகரியில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. அதீத கனமழையினால் ஆங்காங்கே தணணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தொடர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சூழலில் தமிழகத்தில் மலை மாவட்டங்களில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் அதீத கனமழை குறைந்தாலும், 2 அல்லது 3 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.