தமிழகத்தில் வருகின்ற 27 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த முடிவெடுத்துள்ளதாக லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை:
சென்னை அயனம்பாக்கத்தில், லாரி உரிமையாளர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் வருகின்ற 27 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த லாரி உரிமையாளர் சங்கத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
Read more – கர்நாடகாவில் ஜனவரி 1 ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு
அதனை தொடர்ந்து சங்கத்தின் மாநில தலைவர் குமாரசாமி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், வேகக் கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் ஸ்டிக்கர்கள் குறித்து உயர்நீதிமன்றம் அறிவித்த உத்தரவை உடனே அமல்படுத்த வலியுறுத்தி வரும் 27 ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட லாரி உரிமையாளர்கள் முடிவு எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.