கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை :
இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து, தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுகின்றன. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
இந்நிலையில், கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
தடுப்பூசிக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், மனுதாரர் விரும்பாவிட்டால் தடுப்பூசியை போட்டுக்கொள்ளாமல் இருந்துகொள்ளலாம் என பதிலளிக்க மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் கூறியதை அடுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.