வசந்தகுமார் எனும் ஆச்சரிய மனிதன்!!

தொழிலதிபர் அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் எச் வசந்தகுமார் 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த அகஸ்தீஸ்வரம் என்ற கிராமத்தில் ஹரி கிருஷ்ணன்பெருமாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் இவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உட்பட ஐந்து சகோதரர்கள் ஒரு சகோதரி.

தனது இளம் வயதில்  விஜிபி நிறுவனத்தில் விற்பனையாளராக பணியைத் தொடங்கிய இவர். பின்னர் சொந்தமாக ஒரு மளிகைக் கடையை ஆரம்பித்தார். தனது அயராத உழைப்பின் மூலம் மளிகை கடை தொடங்கிய அவரது தொழில் பயணம் இன்று வசந்த் அன் கோ என்ற பெயரில் தமிழ்நாடு புதுச்சேரி கேரளாவில் 85 கிளைகளுடன் பெரும் வணிக நிறுவனமாக விரிந்துள்ளது.

1978ல   விஜிபி இல் பாத்த வேலைய   ராஜினாமா செய்துவிட்டு  சொந்தமாக மளிகை கடை வியாபாரம் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்த பின் நண்பரின் கடையை வாடகைக்கு எடுக்கிறார்.. கடையில எந்த சரக்கும் இல்லை  வெறும் காலி அறை.  ஆனால் அவர்  செய்த முதல் வேலை ‘வசந்த்&கோ’னு  என்று ஒரு  விளம்பரப் பலகை மாட்டியதுதான். பின்னர், தனக்கு தெரிந்த இன்னொரு நண்பர் மூலம் ஸ்டீல் நாற்காலி  செய்பவரிடம்  4 நாற்காலி கடனுக்கு வாங்கி  அதை தன் கடையில் வைத்து  25ரூபாய்க்கு  வாங்கிய நாற்காலியை  30ரூபாய்க்கு  விற்று   அதில் 5 ரூபாய் லாபம் பார்க்கிறார். அதன்பின்பு கட்டில், பீரோன்னு ஒவ்வொரு  பொருளாக விற்க ஆரம்பிக்கிறார். பணம் கம்மியாக இருக்கிறது  30ரூ இல்லனு சொன்னா குறைந்தபட்சம் 15ரூ  அட்வான்ஸ் தொகையாக வாங்கிக்கிட்டு ஒவ்வொரு நாளும் ஒரு ரூபாய் குடுங்கனு  வாங்கிக் கொள்வாராம்.

30ரூபாய் கணக்கு முடியும் நாளன்று  மேலும் ஒரு ரூபாய் அதிகம் வாங்கி 5ரூபாய் வர வேண்டிய இடத்துல 6ரூ லாபம் பாப்பாராம். தமிழ்நாட்டுக்குள்ள தொலைக்காட்சி வந்த காலம். ரேடியோ, டிவின்னு எல்லாத்தையும் தவனை முறையில வியாபாரம். வியாபார பார்வை எல்லாமே நடுத்தர வர்க்கம் நோக்கி தான். இப்டி கொஞ்சமா கொஞ்சமா வசந்த்&கோ க்கு இந்தியாவின் நம்பர்.1 டீலர் ங்கிற அங்கீகாரம் கிடைத்ததற்கான காரணம் வசந்தகுமார்ங்கிற ஒரு தனிமனிதரோட உழைப்பு மட்டுமே.

 2006 மற்றும் 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.அதன்பின், கடந்த ஆண்டு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர் மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு டெல்லி வரை செல்வாக்கு கொண்ட இவர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்ப்பு எழுந்து வாய்ப்பு நழுவியது. எனினும் ,காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவராக பதவி வகித்தார்  இவருக்குநடிகர் விஜய் வசந்த் உட்பட 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர் அத்துடன் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வசந்த் தொலைக்காட்சியை தொடங்கி நடத்தி வந்தார் வசந்தகுமார். .

நாம் சிறுவயதில் விளம்பரங்களில் அதிகம்  பார்த்த விளம்பரம் வசந்த்&கோ. கடினமாக உழைத்தால் முன்னேறலாம் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்படுவது இது போன்ற மனிதர்களின் வெற்றிதான். வசந்தகுமாரின் ஒரு வெற்றி ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிற அனைவருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன்…

Exit mobile version