முதல்வர் பரப்புரை செல்லும் இடத்தில் துப்பாக்கி, வெடிகுண்டுடன் இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பேரணாம்பட்டு பகுதியில் வேகமாக வந்த கார் மோதியதில் பொதுமக்கள் சிலர் காயமடைந்தனர். இதையடுத்து மக்கள் அந்த காரை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், கார் ஓட்டி வந்த அஜீஸ் என்ற நபரையும் பிடித்து போலிசில் ஒப்படைத்தனர்.
அவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், சந்தேகத்திற்கு இடமாக ஆயுதங்கள், பல நம்பர் ப்ளேட்டுகளும் அந்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த நபரின் பெயர் அஜீஸ் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.