ஆண்மையுள்ள அரசு தான் தமிழகத்தை ஆளுகிறது.அ.து.மு.க.வை உரசிப் பார்ப்பதை எச்.ராஜா நிறுத்திக் கொள்ளவேண்டும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆகஸ்ட் 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடத் தடைவிதித்துள்ளது.இதற்கு நீதிமன்றமும் ஒப்புதல் அளித்தது.
தமிழக அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த எச். ராஜா, ” கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி அளித்துள்ளது. ஆண்மையுள்ள அரசு” பதிவிட்டார். மேலும், சென்னையிலும் டாஸ்மாக் திறக்கப்பட்டு விட்டது. இதனால் கொரோனா வராதாம். ஆனால் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து 5-10 பேர் சமூக இடைவெளியோடு விநாயகர் வைத்தால் கொரோனா வந்துடுமாம். பகுத்தறிவு” என்று தமிழக அரசை விமர்சனம் எச்.ராஜா விமர்சனம் செய்தார்.
இது குறித்து செய்தியார்களிடம் பேசிய ஜெயக்குமார்,அதிமுக அரசு ஆண்மையான அரசு. ட்விட்டரில் எச்.ராஜா சொன்ன சொற்கள் அவருக்குத்தான் பொருந்தும். ட்விட்டரில் கருத்து தெரிவித்து விட்டு அட்மின் மீது பழி போட்டவர். நீதிமன்றம் சென்ற பிறகு மன்னிப்பு கேட்பது தான் ஆண்மை செயலா? ” என்று தெரிவித்துள்ளார்.