கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கலாச்சார பண்டிகைகளில் ஒன்றாக கலந்து விட்ட ஓணம் பண்டிகையை கொண்டாட, முழு ஊரடங்கின் போது தளர்வு வேண்டும் என மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கேரள மக்களின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக ஓணம் பண்டிகை இந்தாணடு ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 31 வரை கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்றின் காரணமாக இந்தாண்டு பண்டிகைகள் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓணம் பண்டிகையினை ஊரடங்கில் தளர்வு வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துவருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்திருந்தாலும், தமிழக கேரள கலாச்சாரங்கள் சங்கமிக்கும் பகுதியாக தற்போதும் திகழ்ந்துவருகிறது. அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து 1956 – ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி தாய் தமிழகத்துடன் இணைந்தாலும் குமரி மாவட்ட மக்கள் பொங்கல் உள்ளிட்ட தமிழர் பண்டி கைகளைப் போலவே கேரள பண்டிகைகளையும், விழாக்களையும் மிகவும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தான் வருகின்ற ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதற்காக, ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கில் தளர்வு வேண்டும் என்ற கோரிக்கையினை குமரி மாவட்ட மக்கள் முன்வைத்துவருகின்றனர். தளர்வு அளித்தால் மட்டுமே வண்ண மலர்களை கொண்டு பூக்கோலம் இட்டு எங்களின் விழாக்களை சிறப்பாக முடியும் என மாவட்ட ஆட்சியருக்கு குமரி மாவட்ட மக்கள்ள மற்றும் சிபிஎம் கட்சியின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.