மீண்டும் மீண்டும் உயரும் கேஸ் சிலிண்டர் விலை… மாறுமா இந்த அவலநிலை.. ஒரு நாளில் ரூ. 25 அதிகரிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது ரூ. 25 அதிகரித்து 835 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை :

சர்வதேச சந்தை கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப நாடுமுழுவதும் ஒவ்வொரு மாதம் 1ம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் மார்ச் மாதம் 1 ம் தேதி முதல் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25 அதிகரித்து 835 உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 15 ம் தேதி சிலிண்டர் ஒன்றின் விலை 710 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பின்னர் பிப்ரவரி 15 ம் தேதி மேலும் ரூ.50 அதிகரித்து 785ஆக இருந்தது. பிப்ரவரி இறுதியில் ரூ.25 அதிகரிக்கப்பட்டு ரூ.810 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

Read more – தடுப்பூசியை போட்டுக்கொண்ட மோடி.. கொரோனா இல்லா இந்தியாவை தேடி…

இந்நிலையில் தற்போது மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835ஆக விலை உயர்ந்துள்ளது. சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்படுவதால் விலை ஏற்றம் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version