அர்ஜூன் மாக் 1 ஏ டாங்கை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

புதிய அர்ஜூன் மாக் 1 ஏ டாங்கை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்த பிரதமர் மோடி சென்னை வந்தார்.  ஐஎன்.எஸ் கடற்படை தளத்தில் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு சாலை மார்க்கமாக சென்றார். வழிநெடுகிலும் நின்ற அதிமுக, பாஜக தொண்டர்கள் கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியும் மக்களை பார்த்து காரில் இருந்தபடியே கை அசைத்தார். நேரு உள் விளையாட்டரங்கம் சென்ற அவர், ஆவடியில் தயாரிக்கப்பட்ட புதிய அர்ஜூன் மாக் -1 ஏ ராணுவ பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த பீரங்கி சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. நாட்டுக்கு மோடி அர்பணித்த அர்ஜூன் மாக் 1 ஏ பீரங்கி 71 புதிய வசதிகளுடன்  வடிவமைக்கப்பட்டது.

Exit mobile version