கீழே கிடக்குற பத்து ரூபாய் உங்களோடதா ? பெண்ணின் கவனத்தை திருப்பி நூதன கொள்ளை

சிங்கப்பெருமாள் கோவிலில் பெண்ணின் கவனத்தை திருப்பி 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

செங்கல்பட்டு :

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் வன்னியர் நகரை சேர்ந்தவர் தனலட்சுமி(25).இவர் சிங்கபெருமாள்கோவிலில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கியில் அவருக்கு சொந்தமான நகைகளை அடகு வைத்துவிட்டு ரொக்கமாக 1லட்சத்து 30ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வீட்டிற்கு செல்ல தனலட்சுமி இருசக்கர வாகனத்திற்கு அருகில் சென்றபோது அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் தனலட்சுமிடம் கீழே 10 ரூபாய் விழுந்து இருப்பதாக கூறியுள்ளனர். அப்பொழுது தனலட்சுமி அந்த 10 ரூபாய் தன் பணம் என்று எண்ணி அதை எடுக்க முற்பட்ட போது அந்த மர்ம நபர்கள் தனலட்சுமி கையில் வைத்திருந்த 1 லட்சத்து 30ஆயிரத்தை எதிர்பாராத விதமாக பறித்து விட்டு இருசக்கர வாகனத்தில் ஓடி விட்டனர்.

Read more – ஆண், பெண் காவலர்கள் ஒரே வீட்டில் இருந்ததற்கு பணி நீக்கமா? காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

இது குறித்து மறைமலைநகர் காவல்நிலையத்தில் தனலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்றுள்ள இந்த நூதன கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version