கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு அரியர் தேர்வுக்கு கட்டணம் கட்டிய அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தனும் உயர்நீதிமனத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதுகுறித்து கடந்த வாரம் விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம் அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்பதை ஏற்று கொள்ளமுடியாது என்றும், ஏதேனும் ஒரு தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
Read more – மேற்கு வங்கத்தில் கொரோனா அதிகம் பரவ முக்கிய காரணம் பாஜக தான் : மம்தா பானர்ஜி திட்டவட்டம்
அதன் அடிப்படையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரியர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் எனவும் அந்த தேர்வை எழுதாதவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படமாட்டார்கள் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு சம்மதம் தெரிவித்த நீதிமன்றம், 8 வாரத்திற்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் இதுகுறித்த அறிக்கையை ஜூலை 2 வது வாரத்திற்கு பிறகு தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்து உத்தரவிட்டுள்ளனர்.