கொரோனா தொற்று வீரியத்தால் தீவிர முடிவெடுத்த தமிழக அரசு… தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவு..

அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு 50 சதவீத இடம் ஒதுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பல மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் தண்டனை வழங்கப்படுகிறது. மேலும், நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடக்கிறது.

அதேபோல், தமிழகத்திலும் நாளொன்றுக்கு 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலைமை தொடருமானால் வாட மாநிலங்களை போலவே தமிழகத்திலும் இட பற்றாக்குறை சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது.

Read more – கொரோனா சான்றிதழ் இல்லை என காக்க வைக்கப்பட்ட பெண்… ஆம்புலன்ஸிலேயே மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம்…

இதையடுத்து, தற்போதைய இரவு ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் பொது முடக்கம் போன்று தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் பொது மருத்துவ சிகிச்சையை பாதியாக குறைத்துக்கொண்டு மீதமுள்ள 50 % கொரோனா தொற்று நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றும், இந்த ஆணையை அனைத்து தனியார் மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version