அதிமுக கொடியை காரில் இருந்து சசிகலா நீக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் : தமிழக காவல்துறை எச்சரிக்கை

அதிமுக கொடியை காரில் இருந்து சசிகலா நீக்காவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை :

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை ஆனார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்தநிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனையை நிறைவு செய்து பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பும் சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பொருத்தியுள்ளார். தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னை இல்லம் வரை அமமுக தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்க காத்திருக்கின்றனர்.

Read more – தமிழகத்தில் 11 மாதங்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு..

இதனிடையே தமிழக எல்லையான ஒசூர் ஜூஜூவாடியில் காரில் இருந்து அதிமுக கொடியை அகற்ற சசிகலாவுக்கு சிறிது நேரம் அவகாசம் வழங்கப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், அதை செய்ய சசிகலா தவறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version