டெல்லி போராட்டம் எதிர்க்கட்சியின் அரசியல் லாபத்திற்காக நடைபெறுகிறது : ஜி.கே.வாசன் கருத்து

டெல்லியில் நடைபெறும் போராட்டம் எதிர்க்கட்சியின் அரசியல் லாபத்திற்காக நடைபெறுகிறது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

சென்னை :

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் மசோதாக்களை எதிர்த்து டெல்லியில் இந்திய விவசாயிகளின் போராட்டம் இன்று 7 வது நாளை எட்டியுள்ளது.இந்த விவசாயிகளின் போராட்டதை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோதும் அதற்கான தீர்வு இன்னும் தீர்க்கமாக எடுக்கப்படவில்லை.நாளை மீண்டும் மத்திய அரசு அடுத்த சுற்றுக்கான பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியிருப்பதாவது:

எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்திற்காக மட்டுமே டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளிடம் குறுகியகால நன்மையை கூறி வருங்காலத்தில் ஏற்படவுள்ள தொடர் வளர்ச்சி மற்றும் வருமானத்தை திசை திருப்ப கூடாது. எதிர்க்கட்சிகளின் சில பொய் பிரசாரங்களால் அப்பாவி விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் பலியாகக்கூடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Exit mobile version