சட்டப்பேரவையில் வன்னியர் இடஒதுக்கீடு நிறைவேற்றம் : அப்பாவை கண்ணீர் கடலில் மூழ்க செய்த அன்புமணி

சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு நிறைவேறியதை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் தனது தந்தையுடன் கண்ணீர் மல்க பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சென்னை :

பாமக சார்பில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பாக சமீப காலமாக தொடர்ந்து போராட்டங்களும் அவ்வப்போது நடைப்பெற்றது.மேலும், ஆளும் அதிமுக அரசு பாமகவின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியும் அளித்தது.

இந்தநிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று இன்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீடு 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட தொகுப்பில் உள்ள வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கவும், சீர்மரபினருக்கு 7 சதவீதமும், எஞ்சிய பிரிவினருக்கு 2.5% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Read more – கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

இதையடுத்து, சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு நிறைவேறியதை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் தனது தந்தை மற்றும் பாமக நிறுவனருமான டாக்டர். ராமதாஸுடன் கண்ணீர் மல்க பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Exit mobile version