பிச்சை எடுப்பவர்களிடம் மாமூல் வசூலித்த பெண்

புதுக்கோட்டையில் கோயில் வாசலில் பிச்சை எடுப்பவர்களிடம் பெண் ஒருவர் லஞ்சம் வசூலித்து இருக்கிறார்.

புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள சாந்தநாதர் கோயில் வயதான மூதாட்டியும், அவரது கணவரும் பிச்சை எடுத்து வருகின்றனர். அவர்களில் கோயிலில் துப்புரவு வேலை செய்யும் இந்திராணி என்பவர் லஞ்சம் வாங்கியிருக்கிறார். பிச்சை எடுக்க வேண்டும் என்றால் தலா ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று கேட்டு வாங்கியிருக்கிறார். அத்துடன் கோயிலில் தர்ப்பணம் செய்யும் புரோகிதர்களிடமும் இந்திராணி லஞ்சம் வாங்கியிருக்கிறார். இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இந்திராணியை அழைத்து மன்னிப்பு கடிதம் வாங்கி அனுப்பி இருக்கின்றனர்.

Exit mobile version