SeithiAlai

தமிழ்நாடு தீயணைப்புத் துறையினர் சார்பாக “தீ” செயலி…

தமிழ்நாடு தீயணைப்புத் துறையினரை தொடர்பு கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள “தீ” எனும் செல்போன் செயலியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகப்படுத்தினார்.
CM Edapadi Palanisamy

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறவும், தீ, விபத்து, வெள்ளம், ஆழ்துளைக்கிணறு விபத்து, வனவிலங்கு மீட்பு, ரசாயனம் மற்றும் விஷவாயுக் கசிவு உள்ளிட்ட அவசர உதவிகளுக்கு இத்துறையை மக்கள் எளிதில் அணுகிடவும், நவீன தொழில்நுட்ப உதவியுடன் நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையால் “தீ” எனும் அலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத் துறை

ஆம்டெக்ஸ் எனும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த அலைபேசி செயலியின் மூலம், அவசர காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தீயணைப்பு துறையை அணுகுவதற்கும், அழைத்த 10 வினாடிக்குள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, விபத்து மற்றும் உதவி கோரும் இடத்திற்கு மிக குறுகிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் தகுந்த உபகரணங்களோடு சென்று உதவுவதற்கும் வழி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக “தீ” செயலியுடன் கூடிய 371 கைக்கணினிகள் அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் மற்றும் சென்னையில் உள்ள தீ கட்டுப்பாட்டு அறைக்கும் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் பழனிசாமி இன்று “தீ” செயலியுடன் கூடிய முதல் கைக்கணிணியை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டி.ஜி.பி. ஜாபர் சேட்டிடம் வழங்கினார்.

Exit mobile version