திண்டுக்கல் தேனி மாவட்டத்தில் குழந்தை கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் -திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் முத்துச்சாமி பேட்டி

திண்டுக்கல் சரக காவல்துறை மற்றும் அலையன்ஸ் நிறுவனமும் இணைந்து மனிதக்கடத்தல் விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியது. இந்த கருத்தரங்கில் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் சரக காவல்துறை துணை தலைவர் முத்துச்சாமி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் பேசிய டி ஐ ஜி திண்டுக்கல் தேனி மாவட்டங்களில் குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் குழந்தை கடத்தலை தடுக்க காவல்துறையினர் குழந்தை நல அமைப்பினருடன் சேர்ந்து பணியாற்றவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதே போல் குழந்தை கடத்தல் மற்றும் மனிதக்கடத்தலில் ஈடுபடபர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளில் காவல்துறையினர் மெத்தனமாக இருக்க கூடாது என்றும் அறிவுறுத்தினார். குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்பதால் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்வும் டி ஐ ஜி முத்துச்சாமி கேட்டுகொண்டார்.