தேர்வு முறைகேடுகளை தடுக்க புதிய விடைத்தாள் : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தேர்வு முறைகேடுகளை தடுப்பதற்காக டி.என்.பி.எஸ்.சி. புதிய விடைத்தாள்களை அறிமுகம் செய்துள்ளது.

சென்னை :

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் இனி வரும் தேர்வுகள் சில மாற்றங்களுடன் செயல்படும் என்றும், தேர்வு முறைகேடுகளை தடுக்க விடைத்தாள் புதிய முறையில் அறிமுக படுத்தப்பட இருக்கிறது என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

*தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது ஒருமுறை பதிவு அல்லது நிரந்தரபதிவில் கட்டாயமாக தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

*இதுவரை தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் விரைவில் பதிவு செய்தல் வேண்டும்.

*தேர்வு நேரத்தின் போது நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய தங்களது ஆதார் எண்ணை பதிவிட்டால் மட்டுமே நிரந்தரப்பதிவில் மூலமாக பதிவிறக்கம் செய்யமுடியும்.

*விண்ணப்பதாரர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒருமுறைப்பதிவு அல்லது நிரந்தரப்பதிவு வைத்திருக்க அனுமதியில்லை.

*வரும் ஜனவரி 3 ம் தேதி நடைபெற உள்ள (குரூப்-1) முதல் நிலைத்தேர்வு மற்றும் 9, 10-ந்தேதிகளில் நடைபெறவுள்ள உதவி இயக்குனர் தேர்வுகளுக்கு ஆதார் எண்ணை இணைத்த பிறகே பதிவிறக்கம் செய்ய முடியும்.

*தேர்வு முறைகேடுகளைத் தடுக்க புதிய கொள்குறிவகை விடைத்தாள் அறிமுகம்.இந்த விடைத்தாளில் தேர்வு எழுத கருப்பு நிற மை கொண்ட பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

Read more – பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம் : வேளாண் மசோதாக்கள் ரத்து செய்யப்படுமா?

மேலும் இதுகுறித்த கூடுதல் விளக்கம் தேவைப்பட்டால் விண்ணப்பதாரர்கள் 18004251002 என்ற எண்ணிற்கும் அல்லது contacttnpsc@gmail.com எனும் தேர்வாணைய மின்னஞ்சல் முகவரி வழியாகவும் தொடர்புகொண்டு உரிய தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version