இன்றைய (26-04-2022) பெட்ரோல், டீசல் விலை இதுதான்..!!

petrol and diesel prices
Today Petrol price

கடந்த இருபதாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 110.85-க்கும் டீசல் ரூ. 100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. இதனால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெட்ரோல், டீசல் விலை கடுமையான ஏற்றத்தை கண்டன.

இதனால் வாகன ஓட்டிகளிடம் கலக்கம் உருவானது. அதற்கு முன்னதாக உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருந்தன.

ஆனால் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் தொடங்கியதை அடுத்து இரண்டுக்குமான விலை அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர தொடங்கியது. இதனால் மற்ற பொருட்களின் விலையும் அதிகரிக்க துவங்கின.

இந்நிலையில் கடந்த இருபது நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் உள்ளன. அதன்படி இன்று (ஏப்ரல்26) ஒரு லிட்டர் பெட்ரோல், 110.85, டீசல் ரூ.100.94க்கு விற்பனையாகிறது.

Exit mobile version