நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் சசிகலா- மருத்துவமனை நிர்வாகம் தகவல்

கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த சசிகலா நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட இருக்கிறார். மருத்துவமனை நிர்வாகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் சசிகலா. அவரது நான்காண்டு சிறை தண்டனை காலம் முடிந்து கடந்த 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.  சிறையில் இருக்கும்போது சசிகலாவுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.  விக்டோரியா அரசு மருத்துவமனயில் சேர்க்கப்பட்ட அவர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிட்-19 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சசிகலாவுக்கு நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ அறிக்கை அடிப்படையில் சசிகலாவின் கொரோனா தொற்று சிகிச்சை முடிவடைந்ததை அடு்துது அவர் நாளை காலை 10 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் உடனே பெங்களூரு திரும்பாமல்  பெங்களூரில் வீடு ஒன்றில் தங்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. 5 நாள் அங்கு ஓய்வெடுத்த பிறகே சசிகலா தமிழகம் வருவார் என்றுத் தெரிகிறது.

Exit mobile version